தாய்லாந்தில் கடந்த 24 நாட்களில் யாரும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படவும் இல்லை. பலியாகவும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. பல நாடுகளிலும் தொற்று நோயின் பாதிப்பு நாளுக்கு நாள், தொடர்ந்து கூடிக்கொண்டெ செல்கிறது. இந்நிலையில், தாய்லாந்தில் கடந்த 24 நாட்களாக புதிதாக பாதிப்புகள் மற்றும் பலியானவர்கள் என யாரும் இல்லை எனவும் நோயின் பாதிப்பு நாட்டில் சற்று குறைந்து வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு முன்பாக கண்டறியப்பட்ட பல நோயாளிகள் வெளி நாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

தாய்லாந்து ஆரம்ப நிலையிலேயே கொரோனாவை கட்டுப்படுத்தியது. நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 3,135 பேர் பாதிக்கப்பட்டனர். 58 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 2,996 நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர் என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. இன்றும் புதிதாக நோய் பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை. தாய்லாந்தில் 23 நாட்களில் உள்ளூரில் உள்ள மக்கள் யாருக்கும் நோய் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. தற்போது நோய் தொற்று காரணமாக 81 பேர் சிகிச்சையில் உள்ளனர். தாய்லாந்து 28 நாட்களுக்கு உள்ளூர் நோய் தொற்றுகளில் இருந்து விடுபட வேண்டும்.

தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாதுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த வருமானத்தில் 12 சதவீதம் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கிறது. கொரோனா பரவலால் தாய்லாந்தின் சுற்றுலாத் துறை முடக்கத்தைச் சந்தித்தது. கொரோனா பாதிப்புகளால் சுற்றுலா பயணிகளின் வருகை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 30-ம் தேதி வரை வெளிநாட்டு விமானங்களுக்கு தாய்லாந்து தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

By Admin

Leave a Reply