தபால் மூலம் போதைப் பொருள் வர்த்தகம் இடம்பெறுவதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் 4 ஆம் திகதி பிரான்ஸிலிருந்து டுபாய் ஊடாக 4,962 போதை மாத்திரைகள் எடுத்துவரப்பட்டுள்ளதுடன், கடந்த 27ஆம் திகதி டுபாயிலிருந்து விமானம் மூலம் போதைப் பொருள் எடுத்து வரப்பட்டுள்ளது.

இவற்றிற்காக போலி பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தம்மிடமிருந்து 23 லட்சம் ரூபா பணமும், 84 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையும் திருடப்பட்டதாக போலியாக முறைபாடு செய்த நபரும், அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

By: government news

By Admin

Leave a Reply