கனடா பிரதமரின் மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோ மார்ச் மாதம் 12ம் திகதி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் தனிமையில் இருந்து வந்த நிலையில் தற்போது குணமடைந்து விட்டார் என்று கனடா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கனடா சுகாதார அமைச்சின் கணிப்பின் படி கனடாவில் 5,655பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60பேர்கள் மரணமடைந்துள்ளனர்.

பிரதமரின் மனைவி குணமடைந்த பிறகு கூறுகையில் :

  • எல்லோருக்கும் வணக்கம்.
  • நான் உடல் நலம் நன்றாக இருக்கின்றேன்.
  • நான் குணமடைய வேண்டும் என்று விறும்பிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
  • மேலும் சிகிச்சைக்காக தனிமையில் இருப்பவர்களுக்கு எனது அன்பையும் ஆதரவையும் தருகிறேன்.

மேலும் கூறுகையில்: தனிமையில் இருப்பது எளிதல்ல, இந்த நேரம் சவாலான நேரம் என்பது எனக்கு நன்கு தெரியும். மேலும் நாம் எல்லோரும் சமூக விலங்குகள் என்னையும் சேர்த்து சொல்கிறேன். நாம் உடல் ரீதியாக மாத்திரம் தான் சிகிச்சைக்காக தனிமையில் இருக்கிறோம், இதனால் யாரும் தனிமையில் இருப்பதற்கு அச்சப்பட தேவை இல்லை.

சமூக வலைதளங்கள் மூலமாகவும் சாதாரண தொலைபேசி அழைப்புகள் மூலமாக நாம் அன்பானவர்களுடன் இணைந்திருக்கலாம். மேலும் சமூக வலையமைப்பு காரணமாக நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

Leave a Reply