இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் டோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்பு எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

டோனி இதற்குப் பிறகாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்று தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றார்.

இந்த வருடம் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க இந்த நிலையில் அதுவும் கொரோனா வைரஸ் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடினால் இந்த வருடம் நடக்கும் 20ஓவர் கொண்ட உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு இருந்ததாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருந்தார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறுகையில்: டோனி ஓய்வு பெற்று விட்டால், அதன் பிறகு மீண்டும் அணிக்கு கொண்டு வர முடியாது. கிரிக்கெட் விளையாட்டில் உலகமே போற்றக் கூடிய ஒரு சில ஜாம்பவான்களே இருக்கிறார்கள். அத்தகைய மகத்தான வீரர்களை அரிதாகவே காணமுடியும். அதாவது ஒரு தலை முறைக்கு ஒருவரைத் தான் இவர் போல பார்க்க முடியும். அப்படிப்பட்ட டோனியை அவசரப்பட்டு ஓய்வு பெற வைத்து விடாதீர்கள்.

மேலும் அவர் கூறுகையில் டோனியின் மனதில் என்ன உள்ளது என்பது அவருக்குத் தான் தெரியும். எது எப்படியோ அவர் மீண்டும் களம் இறங்குவது தேர்வாளர்களின் கையில்தான் உள்ளது.

Leave a Reply