இலங்கை சுங்கத் திணைக்களத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இக்குழு உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்குழு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை ஆய்வு செய்வதற்கும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மேலும் சுங்கத் திணைக்களத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க திறமையான மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்குவது குறித்த பரிந்துரைகளை வழங்க இக்குழு நடவடிக்கை எடுக்கும்.