சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் பலநாள் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்டுச் சென்றிருந்த ‘லொரென்சோ – 4’ என்ற பலநாள் மீன்பிடி படகொன்றே இவ்வாறு 6 மீனவர்களுடன் கடத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் இருந்து 1,160 கடல் மைல் தொலைவில் உள்ள கிழக்கு ஆபிரிக்க கடற்பகுதியில் வைத்து குறித்த படகு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடத்தப்பட்ட மீனவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply