இலங்கை சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் சேவையிலிருந்து விலகிய பொலிஸ், விஷேட அதிரடிப்படை வீரர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது முறையாக மற்றும் திறந்த செயற்றிட்டத்தின் மூலம் மூவர் அடங்கிய குழுவின் பரிந்துரைக்கேற்ப தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இந்தக் குழுவானது 2009 ஜூன் 01க்கு முன்னரும் பின்னரும் சேவையில் இருந்து விலகிய அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட முறையீடுகள் குறித்து ஆராயவுள்ளது.
மீண்டும் சேவையில் இணைக்கப்படும் உத்தியோகத்தர்கள் பொலிஸ் மா அதிபரால் குறிப்பிடப்படும் பிரதேசத்தில் குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அமைய பணியாற்ற வேண்டும்.
சேவையில் இருந்து விலகிய உத்தியோகத்தர்கள் தமது விண்ணப்ப படிவத்தை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk இல் அல்லது இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk இல் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் அளிக்க முடியும்.
விண்ணப்பங்களை அனுப்பும் போது கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளல் 2020’ என குறிப்பிடல் அவசியமாகும்.
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி : மேலதிக செயலாளர், பாதுகாப்பு அமைச்சு, (சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு) 14ம் மாடி, பத்தரமுல்ல.
விண்ணப்படிவங்களை பதிவிறக்கம் செய்ய மின்னஞ்சல் முகவரி : adlseclaw1@defence.lk