சீனாவுடன் தென் சீன கடல் எல்லையில் மோதல் உள்ள நிலையில் இந்தியாவின் உதவியை பிலிப்பைன்ஸ் நாடி உள்ளது.
தென் சீன கடல் எல்லை கடந்த 10 வருடங்களாக மோதல் உச்சத்தில் உள்ளது. இங்கே அமெரிக்கா – சீனா இடையிலான கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு எண்ணெய் வளம்தான் அங்கு நடக்கும் மோதலுக்கு காரணம் ஆகும். அங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய்க்கு யார் சொந்தம் கொண்டாடுவது என்று போட்டி நிலவி வருகிறது.இந்த கடல் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது. இந்த கடல் பகுதி மொத்தமும் தனக்கு சொந்தம் என்று சீனா கூறி வருகிறது.
அதே சமயம் சீனாவிற்கு எதிராக இதே கடல் எல்லையில் இருக்கும் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் முஷ்டி முறுக்கி வருகின்றன. இங்கு சீனா சின்ன சின்னதாக தீவுகளை அமைத்து வருகிறது. அங்கு ராணுவத்தை சீனா குவித்து வருகிறது.
தென் சீன கடல் பிரச்சனை சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கடந்த 10 வருடங்களாக தீவிரம் அடைந்துள்ளது. சீனாவின் தென் கடல் எல்லையை யார் சொந்தம் கொண்டாடுவது என்று சண்டை இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்து வருகிறது. இது பல வருட சண்டை ஆகும்.தற்போது இந்த சண்டை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு அமெரிக்கா தனது காலடி தடத்தை பதித்து இருக்கிறது.
மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்து வருகிறது. தென் சீன கடல் எல்லையில் பிலிப்பைன்ஸ் எல்லை அருகே நேற்று சீனா ரோந்து பணிகளை செய்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் அங்கே பிலிப்பைன்ஸ் கடற்படையும் ரோந்து பணிகளை செய்து கொண்டு வருகிறது.
கிட்டத்தட்ட அமெரிக்கா – சீனா இடையிலான இந்த போர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்க போகும் ப்ராக்சி போர் போல மாறிவிட்டது. ப்ராக்சி போர் என்றால் இரண்டு பெரிய நாடுகள் நேருக்கு நேர் மோதாமல் இரண்டு சின்ன நாடுகளை விட்டு மோத விட்டுக்கொள்ளுங்கள். அதில் ஒரு சின்ன நாட்டை இந்த பெரிய நாடும், இன்னொரு சின்ன நாட்டை எதிரி பெரிய நாடும் ஆதரிக்கும்.
உதாரணமாக ரஷ்யா – அமெரிக்கா மோதலின் போது ரஷ்யா வடகொரியாவையும், அமெரிக்கா தென் கொரியாவையும் ஆதரித்தது. அதுவும் ஒரு வகை ப்ராக்சி யுத்தம்தான். அப்படித்தான் இந்த முறை தென் சீன கடல் எல்லை மோதல் பல ப்ராக்சி போருக்கு காரணமாக அமையுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவின் உதவி: இந்த நிலையில்தான் சீனாவுடன் தென் சீன கடல் எல்லையில் மோதல் உள்ள நிலையில் இந்தியாவின் உதவியை பிலிப்பைன்ஸ் நாடி உள்ளது. தென் சீன கடல் எல்லையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடைந்து வரும் மோதல் இன்னும் சில காலங்களில் முக்கியமான கட்டத்தை எட்டினால், அது பிலிப்பைன்ஸை “கல்லறையாக” மாற்றக்கூடும் என்று பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே எச்சரித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் எல்லை அருகே கடற்படையை சீனா குவித்து வருகிறது. இன்னொரு பக்கம் அமெரிக்காவும் படைகளை குவித்து வருகிறது. இது இப்படியே தொடர்ந்தால் அவ்வளவுதான். அது பிலிப்பைன்ஸ் நாட்டிற்குத்தான் மிகப்பெரிய சிக்கலாக மாறும்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தற்போதைய அதிபர் மார்கோஸ் ஜூனியரின் தலைமையின் கீழ், அமெரிக்காவுடனான பிலிப்பைன்ஸ் உறவு வலிமை அடைந்து உள்ளது. முக்கியமாக அமெரிக்காவுடன் மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளை பிலிப்பைன்ஸ் சமீபத்தில் நடத்தியது. அதேபோல் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன.
2022 ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் இராணுவ நவீனமயமாக்கலை மேம்படுத்துவதற்கும் அமெரிக்கா $100 மில்லியன் தொகையை வழங்கி உதவியதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அமெரிக்காவின் உதவி போதாது என்பதால் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் விதமாக இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க பிலிப்பைன்ஸ் முடிவு செய்துள்ளது.
பிலிப்பைன்ஸ் இராணுவம் கடலோர பாதுகாப்பிற்கு வேண்டி பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்க ஆலோசனைகளை செய்து வருகிறது. ஏற்கனவே பிரம்மோசின் பேட்டரிகளை பயன்படுத்தும் பிலிப்பைன்ஸ் இப்போது அதிக அளவு பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தில் இறங்கி உள்ளது.