உலகளவில் மக்களை பாதித்து இருக்கும் கொரோனா தற்சமயம் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருக்கின்றது. சில இடங்களில் அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது.

இந்த வரிசையில் தற்சமயம் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையில் குறைந்து வருகிறது.

ஆனாலும் தற்போது அதனைத் தொடர்ந்து டெங்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆகையால் பொதுமக்கள் தமது வீடுகள், அலுவலகங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அனுர குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகள், கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் இடங்கள் கடந்த காலங்களில் மூடப்பட்டிருந்ததால், அந்தப் பகுதிகளில் டெங்கு தொற்றின் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply