இலங்கை நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சுமார் 2900 மேட்பட்ட சிறைக்கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 17 மார்ச் தொடக்கம் 04 ஏப்ரல் வரைக்கும் 2961 பேர் ஜனாதிபதியின் விசேட குழுவின் பரிந்துரையின் பெயரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தில் மிகவும் அதிககாலம் இருந்தவர்கள், குற்றப்பணம் கட்ட முடியாமல் இருந்தவர்கள் அது போன்று சிறு தவறுகள் செய்து பிணை கிடைக்காமல் இருந்தவர்கள் அதே போன்று நோயாளிகள் போன்ற பலர் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டனர். நாட்டின் சிறையில் சுமார் 26,000 சிறைக்கைதிகள் இருக்கின்றனர், அனால் சிறைச்சாலை 10,000 கைதிகளுக்கே போதுமானதாக வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.