தென் கொரியா சினிமாவை கண்டு களித்த வடகொரியாவின் இரு சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
வடகொரியா மக்கள் தென் கொரியா மக்களுடன் எந்த வகையில் தொடர்பை ஏற்படுத்தினாலும், சொந்த நாட்டு மக்களுக்கு தண்டனை வழங்கும் வழக்கம் வடகொரியாவில் இருந்து வருகின்றது.
இதுமட்டுமன்றி, வடகொரியாவில் தென்கொரியா நாடகங்களை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி தென் கொரியா நாட்டின் இசை சினிமாவை பார்த்த இரு பாடசாலை மாணவர்களுக்கு, 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது.
வடகொரியாவின் அதிபராக இருக்கும் கிம் ஜோங் உன்னினால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.