இன்று(11)குச்சவெளி பிரதேச சபைக்கு உட்ப்பட்ட சாகர புர எனும் கிராமத்தில் அமைந்துள்ள பௌத்த விகாாரை சிரமதானம் இடம் பெற்றது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இந்நிிகழ்வானது குச்சவெளி இளைஞர்கள் , தன்னார்வ தொன்டர்களால் மேற்க்கொள்ளப்பட்டது.
இச்சிரமதான வேலை காலை 8:30 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 11மணியளவில் நிறைவு பெற்றது.
இது தொடர்பில் விகாராதிபதி அவர்கள் பேசுகையில் தாம் இந்த பிரதேச மக்களின் சமூக நல்லிணக்க விடயங்களை பாராட்டுவதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் வாழும் மூவின மக்கள் மத்தியில் பாரிய புரிந்துணர்வை எற்படுதும் என்றும் இந்த குச்சவெளி பிரதேச மக்களுக்காக தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இதன் போது ஓய்வு பெற்ற இழைந்த குள முஸ்லிம் வித்தியாளய அதிபர் சிபுனிஸ் ஆசிரியர் இது தொடர்பில் பேசுகையில் தாம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் குறித்த விகாரையின் தலைவர் சங்கைக்குறிய ஹாமதுரு மிக நீண்ட காலமாக இப்பிரதேச மக்களோடு சகோதரத்துவமாக பழகுவதாகவும் தெரிிிவித்தார்.