சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எமது பொருளாதாரத்தை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல முடியும்.கடன்களின் மூலமாக மாத்திரம் இதற்கான தீர்வுகளை தேடாமல் கடனற்ற நிதி சேமிப்பின் மூலம் நாட்டை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல முடியும்.
இந்த நடவடிக்கைகளின் பிரதிபலன்களை எதிர்வரும் காலத்தில் நாட்டிலுள்ள அனைவரும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எப்பொழுதும் கடன் பெற்று செயற்படுவதனால், செயற்பாடுகள் வெற்றியளிப்பதில்லை.
ஒவ்வொரு வழியிலும் இதற்கான நிதியை பொற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது.
எனினும், தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்களில் அதன் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.