சமூகத்திற்க்காக இனம்,மதம்,பாராது பாடுபடும் சிலர் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள் அந்த வரிசையில் எமது நீண்டகால ஆய்வின் பிரகாரம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் ஜாயாநகரில் வசிக்கும் சகோதரர் அத்தீத் என்று அழைக்கப்படும் M.S.றியாட் அவர்கள் பற்றி எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
குச்சவெளியில் பிறந்த இவர் இளவயதில் இருந்து சமூகப்பற்றுள்ளவராகவும்,சமூக ஆர்வலராகவும் அடையாளம் காண முடிந்தது ஊருக்காக தன்னால் ஏதாவது பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற உத்வேகம் ஒரு சமூக சேவைகள் அமைப்பொன்றை நிருவ ஏதுவாக அமைந்திருந்தது. கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்பாக பல்லின மக்கள் அபிவிருத்தி அமைப்பினை நிறுவி அதனூடாக குச்சவெளி பிரதேச சபைக்குட்ப்பட்ட மக்களுக்கு இன பேதங்கள் பாராமல் சேவையாற்றுவதில் சகோ. ரியாட் பாரிய பங்காற்றி இருந்தார்.
இதனால் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களுக்கு ஆளானாலும் தனது சமூகப்பணியில் இருந்து பின் வாங்காமல் தமது ஊரை நேசிக்கும் சகோ.அதீத் இன்னும் ஊர் இளம் தலைமுறையின் அபிவிருத்திக்காக முயற்ச்சி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
அது மட்டுமன்றி தமது ஊர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கெட்ஸ் எனும் மாலை நேர பாட வ குப்புக்களை ஆரம்பித்து அதனூடாக தனது பங்களிப்பை செய்து வருகின்றார்.
அரசியல் லாபத்திற்க்காக தம்மை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் பலருக்கு மத்தியில் சகோ. அதீத் அவர்களின் சமூகப்பணியானது பாராட்டுக்குறியதே!!!