உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல மனிதர்கள் உதவிகள் செய்து வருகின்றனர். இதனடிப்படையில் சச்சின் டெண்டுல்கர் முன்னதாகவே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
இப்போது ‘அப்னாலயா’ தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மும்பை சிவாஜி நகர், கோவந்தி பகுதியில் வசிக்கும் ஏழைகளிள் வாழ்வாதார நெருக்கடியை ஒழிக்கும் நோக்கில் 5ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.