ஆப்கானிஸ்தானில் 2 ராணுவ வீரர்கள் சக வீரர்கள் 12 பேரை சுட்டு கொன்றனர்.

இந்த சம்பவம் ஹெரட் மாகாணத்திலுள்ள ராணுவ முகாமில் நிகழ்ந்தது. இந்த முகாமில் 14 ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு இந்த முகாமில் இருந்த 2 ராணுவ வீரர்கள் தங்களது சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்.

மேலும் அந்த 2 வீரர்களும் சக வீரர்களிடம் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

Leave a Reply