கல்விப்பொது தராதர சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள, தேசிய அடையாள அட்டைகளை இதுவரை பெற்றிராத பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே.. நாளையதினம் (26) க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்காக மாத்திரம், ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களம் இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, தலைமை அலுவலகம் மற்றும் வவுனியா, மட்டக்களப்பு, காலி, குருணாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய அலுவலகங்களும், நாளை (26) முற்பகல் 8.30 மணி முதல் பி.ப. 1.00 மணி வரை, திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள், தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு தங்களது பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் அல்லது உரிய கிராம அலுவலரினால் உறுதிப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.