கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும், சுகாதார நடைமுறையின் கீழ், இரண்டாவது நாளான இன்று 7 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜீமா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 05/03/2021 மற்றும் சனிக்்கிழமை (06) சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கொரோனாவினால் மரணித்தவர்களின் பதினாறு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாக சுகாதார திணைக்களத்தின் அறிிக்கைகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் வெள்ளிக்கிழமை ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், நேற்றைய தினம் சனிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த ஐந்து ஜனாஸாக்களும், நாரங்கொடயை சேர்ந்த ஒருவர் மற்றும் கொழும்பைச் சேர்ந்த ஒருவருமாக ஏழு ஜனாஸாக்கள் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply