உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

உலகளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சிகிச்சைகள் பலனின்றி 4 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.

ஆனாலும் இந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ரஷ்யாவில் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. “அவிபாவிர்” என்ற இந்த மருந்து அந்நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாளம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மருந்தை 10 நாடுகள் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply