இன்னும் 24 மணி நேரத்துக்குள் அந்த 49 பேரையும் கண்டுபிடிக்க இலங்கை போலீஸ் தலைமையகம் அதிரடி நடவடிக்கையை மேட்கொண்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கை பூராகவுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த 49 பேரும் இந்தியா, சோமாலியா, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் கத்தார் நாட்டிலிருந்து இலங்கைக்குல் மார்ச் மாதம் 1- 19ம் திகதியில் வந்துள்ளனர்.
போலீசாரின் தகவலின் படி இந்த 49 பேரும் அக்கரைப்பற்று, பொத்துவில், ராஜகிரிய, அக்குறனை, பதுல்ல, சில்லவ், திஹாரி, பேருவெல, முந்தலாம, கொழும்பு, மத்தள, ரிடிகம, கெக்கிராவை, வெல்லம்பிட்டிய, ஹக்மன, தும்மலசூரிய, திக்வெல்ல மற்றும் கொலோனாவை போன்ற பகுதியை சேர்ந்தவர்கள்.