கொரோனா வைரஸ் தொடர்பான சோதனை செய்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மருத்துவ முறைகள் பற்றி தெரிந்துகொள்ளவும் பரீட்சார்த்தமாக தனி website ஒன்றை கூகுளின் துணை நிறுவனமான வெரிலி உருவாக்கி உள்ளது.
உலகையே உலுக்கி வரும் Corona வைரசினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. இது குறித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ”கொரோனா பாதித்துள்ளதா இல்லையா?, பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிக்க வேண்டும்? என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள தனி வெப்சைட்டை கூகுள் உருவாக்கி வருகிறது” என அறிவித்திருந்தார். இது பற்றிய பல்வேறு வாத பிரதிவாதங்களுக்குப் பிறகு கூகுளின் துணை நிறுவனமான வெரிலி, கொரோனா வெப்சைட்டை ஆரம்பித்து விட்டது.
இப்போதைக்கு அமெரிக்காவின் மட்டும் இந்த வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவோர், அமெரிக்க குடிமக்களாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்
இது குறித்து வெரிலி கூறும்போது, ‘அதிக பாதிப்பு இருப்பதால் கலிபோர்னியாவில் இப்போதைக்கு வெப்சைட்டை தொடங்குகிறோம்,’ என்று கூறியுள்ளது. இந்த வெப்சைட்டுக்கு ‘புராஜெக்ட் பேஸ்லைன்‘ என பெயரிடப்பட்டுள்ளது.