சீனாவில் ஹண்டா வைரஸ் எனப்படும் புது வகை வைரஸ் ஒன்றால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மக்கள் அச்சப்பட்டும் அளவுக்கு இது ஒன்றும் புதிய வைரஸ் கிடையாது என்பதால் போலியான தகவல்களை நம்பி யாரும் அச்சப்பட தேவையில்லை.
இது கடந்த 1976ல் தென்கொரியாவில் தோன்றிய வைரஸ் ஆகும். எலிகள் மூலம் பரவ கூடிய இந்த வைரஸ் கொரோனா போல இல்லாமல் இந்த ஹண்டா வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது.
இணையத்தில் தமிழ் உலகில் வைரலாக இந்த வைரஸ் தொடர்பான தகவல்களை உலக சுகாதார நிலையத்தின் அறிக்கையின் பிரகாரம் மாத்திரமே உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.