கொரோனா தொற்று வீதம் கூடிக்கொண்டு செல்கிறது.
நாளுக்கு நாள் அச்சம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் முஸ்லிமான ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணம் அடைந்தால் அவரது உடலையும் எரிக்கும் நிலை ஏற்படலாம். அல்லது குளிப்பாட்டவோ கபனிடவோ தொழுகை நடாத்தவோ அனுமதிக்காமல் பொலிதீன் பையினால் கட்டப்பட்டு புதைக்கவும் படலாம்.

எனவே இதன் போது என்ன செய்வது? இது இஸ்லாத்தில் குற்றமாகாதா?

முதலில் பிறர் நலன் சார்ந்து நடைமுறைப்படுத்தப்படும் சட்டத்தை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதை புரிந்துகொள்ளல் வேண்டும்.

கபுறுடைய வாழ்க்கை என்பது அடக்கம் செய்யப்பட்டால் மட்டுமே ஏற்படும் என்பதல்ல. அது நமது ஆண்மீக நம்பிக்கை சார்ந்த அம்சம். மனித ஆத்மாவுக்கு அல்லாஹ் கொடுக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் இடைப்பட்ட இன்னொரு வாழ்க்கை என்பதையும் நாம் நம்பியாக வேண்டும்.

ஒருவர் முறையாக அடக்கம் செய்யப்பட்டாலும் சரி, முறைதவறி எரிக்கப்பட்டாலும் சரி அல்லது மிருகங்களுக்கு இரையானாலும் சரி கப்று விசாரணை, கப்றுடைய வாழ்க்கை நடந்தே ஆகும் என்பது எமது ஈமானோடு சம்மந்தப்பட்டது.

இறைவன் நமது சக்திக்கு மீறிய விடையத்தில் எப்பொழுதும் நம்மை குற்றம் பிடிக்கமாட்டான் என்பதும் அல்குர்ஆனில் அவன் அளித்திருக்கும் வாக்கு மூலம்.

எனவே பொதுவாக கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவருடைய உடலை உறவுகள் பார்த்து, அவரவர் மதக் கடமைகள் நிறைவேற்றப்பட்டு, அடக்கம் செய்வதன் மூலம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியாது எனும் நிலையில் அனுமதி மறுக்கப்படுமானால் அதை ஏற்றுக் கொள்வது நம் மீது குற்றமாகாது.

ஆக்கம்: உம்மு மிஸால் அப்ரார்

Leave a Reply