கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கடும் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடாது உடலை வருத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது அல்லது உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என மருத்துவநிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அவர்கள் சில வாரங்கள் எச்சரிக்கையுடன் இருந்த பின்னரே மீண்டும் தங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பெருமளவானவர்கள் covid19 தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கoள் இதிலிருந்து மீண்டவர்கள் நீண்டகால பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

அசாதாரண சோர்வு, கவனம் செலுத்துவதில் சிரமம், உடல் வலிகள் குறிப்பாக மூட்டுவலி ஆர்வமின்மை போன்ற அறிகுறிகளை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொவிட் நோயாளிகளை சமூகம் நடத்தும் விதம் காரணமாக சில நோயாளிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாககூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிகுறிகள் மூன்று முதல் ஐந்து வாரத்திற்கு தொடரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உடலை வருத்தும் நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் செய்யக் கூடாதவை

கடுமையான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என ஆலோசணை வழங்கியுள்ள மருத்துவர்கள் அதேவேளை குருதி உறைவு போன்றவை காரணமாக முழுமையாக படுக்கையில் ஓய்வில் இருக்க வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகள் கொரோனாவிலிருந்து மீளும்போது அவர்களது நுரையீரல் இறுக்கமானதாகி விடுகின்றது. இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சுவாசிப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply