நீங்கள் விரும்பும் செல்லப்பிராணிகளோடு வீட்டிலிருந்தே ரசித்து பார்க்கும் வசதியை கூகிள் நிறுவனம் தனது 3D தொழிநுட்ப வசதியோடு வெளியிட்டுள்ளது. உங்கள் மொபைல் போனில் நீங்கள் விரும்பும் பிராணியை நீங்கள் விரும்பும் இடத்தில வைத்து நேரடியாக பார்த்து ரசிக்க முடியும்.
இது ஒரு வித்தியாசமான உண்மையான அனுபவத்தை தரும் வகையில் அமையப்பெற்றுள்ளது.
உலகமுழுக்க பரவிக்கிடக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வீட்டிலே முடங்கிக்கிடக்கும் இந்நேரத்தில் மிருகங்களை வீட்டில் வைத்துப் பார்க்கும் உண்மையான அனுபவத்தை கூகிள் இப்போது வழங்கியிருக்கிறது.
இந்தப்புதிய அனுபவத்தைப் பெற உங்களிடம் ஒரு ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்ட் 7.0 அல்லது அதட்கும் மேல்பட்ட வெர்சன் ஆப்பிள் ஐபோன் இருந்தால் iOS 11 அல்லது அதட்கு மேட்பட்ட வெர்சன் இருந்தால் போதும். கூகிள் குரோம் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
பின்வரும் மிருகங்களை உங்கள் வீட்டுக்கே கொண்டுசெல்லலாம்
- Alligator
- Angler fish
- Brown bear
- Cat
- Cheetah
- Dog
- Duck
- Eagle
- Emperor penguin
- Goat
- Hedgehog
- Horse
- Lion
- Macaw
- Octopus
- Pug
- Giant panda
- Rottweiler
- Shark
- Shetland pony
- Snake
- Tiger
- Turtle
- Wolf