btf

பிரதான வீதி கும்புறுப்பிட்டி பகுதியில் இன்று (5) மோட்டார் சைக்கில் ஒன்றில் லொறி(பட்டா)ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த தம்பதியினர் குழந்தையுடன் மயிரிலையில் உயிர் தப்பினர். மோட்டார் சைக்கிலில் கும்புறுப்பிட்டி வைத்தியசாலை நோக்கி போய்க்கொன்டிருந்த வேளையில் காலி பகுதியைச்சேர்ந்த லொறி ஒன்று வேகமாக முந்திச்செல்ல முற்ப்பட்ட பொழுதே இந்த விபத்து ஏற்ப்பட்டது.
குறித்த விபத்து சம்பவித்த பகுதியைச்சேர்ந்தவர்கள் லொறியினை மடக்கிப்பிடித்தனர் குச்சவெளி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஸ்தலத்திற்க்கு வந்த போக்குவரத்துப்பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து பிணையில் விடுவித்தனர்.

விபத்துக்குள்ளான தம்பதியினர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply