தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் அச்சம் கொண்டு ஊரடங்கு உத்தரவிற்கு அமைய தங்களின் வீடுகளுக்குள் அமர்ந்திருக்கின்ற இந்த சூழ்நிலையில் குப்பை கூளங்களை அகற்ற முடியாமலும் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதற்கமைய இன்று குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் கட்டளைக்கு அமைய புல்மோட்டை, குச்சவெளி உப அலுவலகங்களின் ஊழியர்களைக் கொண்டு குச்சவெளி பிரதேசத்தில் மாபெரும் சிரமதான பணி மற்றும் குப்பை கூளங்கள் அகற்றும் பணி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக், உப தவிசாளர் A.S.M.சாஜித், கௌரவ உறுப்பினர் A.C.M.மீசான் மற்றும் குச்சவெளி உப அலுவலக பொறுப்பதிகாரி A.S.நௌபர், புல்மோட்டை உப அலுவலக பொறுப்பதிகாரி S.சலாம்தீன் பிரதேச சபையின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.