தற்போது நாட்டை அச்சுருத்தி வருகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று நாடலாவிய ரீதியில் பரவி வருகின்றது. இந்த சூழ்நிலையில் மக்கள் மிக நிதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய பொது இடங்களை அவசர தேவைக்காக பயன்படுத்தும் போது பொது மக்கள், அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பாதுகாப்புக்களை மேம்படுத்திக் கொள்வது கட்டாயமாக இருக்கிறது. அதற்கமைய குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் தலைமையில் இன்று 30.03.2020 முதல் கட்டமாக குச்சவெளி தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள், அரச உத்தியோகத்தர்கள் சுகாதாரத்தை பேணும் வகையில் கை கழுவுதல் மற்றும் பாதுகாப்பான குடிநீர் அருந்தும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. அதற்கமைய இவ் நடவடிக்கை பிரதேச சபைக்குட்பட்ட நிலாவெளி, இறக்கக்கண்டி, புல்மோட்டை பகுதிகளில் மக்கள் அத்தியவசிய தேவைகளுக்காக பயன்படுத்தும் இடங்களில் கை கழுவுதல், பாதுகாப்பான குடிநீர் ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.

Leave a Reply