குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிருவாகிகளுக்கு தவிசாளர் விடுக்கும் விசேட அறிவிப்பு. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள covid-19 என்கிற வைரஸ் தொற்றின் அச்சத்தால் ஏற்ப்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்கள் சங்கத்தினால் சேமிக்கப்பட்ட பணத்தை பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான சங்கத்திலிருந்து நிதியை பெறுவதற்கான அனுமதியை நாங்களே பெற்றுத் தந்தோம். இவ்வாறு இருக்கையில் இந்த சூழ்நிலையினை கருத்தில் கொண்டு தாங்கள் செயல்பட வேண்டும். இதை விடுத்து எதுவித அரசியல் இலாபமோ அரசியல் பிரதிநிதிகளின் பெயர் பட்டியல் அடிப்படையில் அதற்கான முன்னுரிமையில் நீங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை. தங்களின் சனசமூக நிலையமானது சுயமாகவும், சுதந்திரமாக இயங்குவதுடன் பொருட்கள் விநியோகிக்கும் போது உண்மையிலேயே வழங்கக்கூடிய பயனாளிகளை இனங்கண்டு அவர்களை கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்திக் கொண்டு அதனை பிரதேச செயலாளர் சான்று பண்படுத்திய பின்னர் அந்த உணவுப் பொதிகளை ஒவ்வொருவருக்கும் வழங்கலாம். இதை தான் நீங்கள் செய்தல் வேண்டும். அதை விடுத்து எந்தவிதமான அரசியல் தலையீடும் இன்றி இன, மத, கட்சி வேறுபாடின்றி நேர்மையுடன் செயற்பட வேண்டும். அத்துடன் பொருட்கள் வழங்கும்போது எமது சபையின் நேரடி மேற்பார்வையில் வழங்கப்படுவது சிறந்தது. மேலும் தங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக சகலவிதமான ஆலோசனைகள், அறிவுரைகளை தங்களுக்கு பொறுப்பாகவுள்ள சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களிடமிருந்து பெற்று அவரின் வழிநடத்தலின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தங்கள் சங்கத்திலிருந்து பெறப்படுகின்ற பணம் மற்றும் வழங்கப்படுகின்ற பொருட்களுக்கு தாங்களே பொறுப்புதாரிகள் என்ற விடயத்தையும் கவனத்தில் கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.A.முபாரக்தவிசாளர்குச்சவெளி பிரதேச சபை

Leave a Reply