இன்று 25/02/2020 பல்வைக்குள பாலர்பாடசாலை யில் கலிவுப்பொருட்களை பயன் படுத்தி செய்த பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது .

இக்கண் காட்சியில் பல்வைக்குள பாலர் பாடசாலை,தி/அந்நூரியா பாலர் பாடசாலை மாணவர்களும் மொத்தம் 36மாணவ மாணவிகள் கலந்து கொன்டனர்.

இதில் களி மண்,ரெஜிபோம்,கடதாசி,சிரட்டை,காட் போட் அட்டைகள்,போன்ற கலிவூப்பொருட்களை பயன்படுத்தி பல வகையான ஆக்கங்கள் செய்யப்பட்டிருந்தது. பெற்றாரின் உதவியோடு சிறுவர்களின் ஆக்கங்கள் மிக அழகாகவும்,ஆக்கபூர்வமான படைப்பாகவும் அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபை பிரதி தவிசாளர் A.S.M.சாஜித், உறூப்பினர் A.C.மீசான், குச்சவெளி பிரதேச ஐ.தே.க. அமைப்பாளர் A.சமீம், மு.கா. மகளீர் சங்க அமைப்பாளர் S.முர்சிதா ,ஆகியோர் கலந்து கொன்டனர்.

இந்தப்பாடசாலையின் 2 தொன்டர் ஆசிரியைகளாக சப்ரா அஸ்வர், மின்ஹாஜ் நஸ்ரினா,மற்றும் 1பிரதான ஆசிரியையாக A.S.அஸ்னா ஆகியோரும்  கடமையாற்றி வருகின்றனர்.

இந்தப்பாடசாலை தொடர்பாக ஆசிரியை A.S.அஸ்னா  பேசுகையில்..பாடசாலைக்காண மின்சாரம் இல்லையென்றும்,குடி நீர் பிரச்சிணை நிலவுவதாகவும் தெரிவித்தார்.

இக் கண்காட்சியை பார்வையிட பெற்றார்கள்,பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்களும் வந்திருந்தனர்.

Leave a Reply