குச்சவெளி பிரதேசமானது பிரதேச செயலாளர் பிரிவின் மத்திய நிலையமாக காணப்படுவதுடன் இங்கு அதிகளவான அரச திணைக்களங்கள் காணப்படுகிறது. இத் திணைக்களங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வங்கி நடவடிக்கைகள் அனைத்தும் இங்கு இடம்பெறுகிறது. அதற்கமைய மத்திய பகுதியாக காணப்படுகின்ற இப் பகுதியில் ATM இயந்திரம் இல்லாத காரணத்தினால் மக்கள் மிகவும் சிரமங்களை எதிர் கொள்வதுடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள Covid-19 வைரஸ் அச்சம் காரணமாக வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற பெண்கள், வயோதிபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் தங்களின் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது இதனால் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். அதற்கமைய இப்பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் முதல் கட்டமாக குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் A.முபாரக் அவர்களின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக குச்சவெளி பகுதியில் இலங்கை வங்கி ATM இயந்திரத்தை பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இங்கு அதிகமாக அரச திணைக்களங்கள் வங்கி நடவடிக்கை மேற்கொள்கின்ற காரணத்தால் இப்பகுதியில் இரண்டாம் கட்டமாக இலங்கை வங்கி கிளையினை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விடயம் தொடர்பாக இலங்கை வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு 20.04.2020 ம் திகதி கௌரவ தவிசாளர் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட கடித்திற்கமைவாக இன்றைய தினம் 22.04.2020 தலைமை அலுவலகம் அதனை ஏற்றுக்கொண்டு மிக விரைவில் குச்சவெளி பிரதேசத்தில் ATM இயந்திரத்தை பொருந்தித் தருவதாக உறுதிமொழி அளித்துள்ளனர்.