கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் சில குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் இவர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரனின் பிறந்த நாளான இன்று (15) இடம்பெற்ற இரத்ததான முகாமில் இரத்த தானம் வழங்கிய பின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவரை நான் ஒரு அரசியல்வாதியாக கூட கணக்கெடுப்பதில்லை.

ஒரு லட்சம் வேலை வாய்ப்பு என்பது நாட்டின் ஜனாதிபதியினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டது. அந்த வேலை தற்போது வழங்கப்படுகிறது.

கருணா அண்மையில் ஒரு கருத்து வெளியிட்டதனை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். மட்டக்களப்பிலுள்ள அமைச்சர் 20.000 ரூபாவை வேலைவாய்ப்பு விண்ணப்பங்களுக்கு வாங்கி வேலை வாய்ப்பை கொடுத்ததாக கூறியிருந்தார்.

மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் பெயரை உச்சரித்து அவர் பிரபல்யமாக வேண்டும் என நினைப்பவர்தான் கருணா. ஆகவே அவர் என்னைப் பற்றி பேசினால் அதை நான் கணக்கெடுப்பதில்லை.

Leave a Reply