கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன் நடுவீதியில் பட்டப்பகலில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதால் கணவரை பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த நபரை நேற்று கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அந்த நபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரது மனைவி கந்தளாய் வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்ற நிலையிலேயே இவ்வாறு கணவர் தாக்கியுள்ளார்.
கணவரின் தாக்குதலில் காயமடைந்த மனைவி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.