அரசாங்கம் முன்னெடுக்கும் முயட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுப்பாடுடன் நடந்துகொள்வது அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தி ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க உதவுவது காலத்தின் தேவை என அறிந்தும் முட்டாள் தனமாக நடந்துகொள்வது கவலையளிக்கிறது.
அரச கட்டளைக்கு அடிபணிந்து பொதுநல சிந்தனையோடு செயட்படுவது நமது நல்ல ஒழுக்கமுள்ள குணத்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமும் கூட. ஆனால் கவலையான விடயம் என்னவெனில் ஒழுக்கத்தின் பிரதிபலிப்பாக திகழவேண்டிய நம் முஸ்லிம்கள் இந்த விடயத்தில் மிகவும் கீழ் தரமாக நடந்துகொள்வதாக குச்சவெளி உட்பட பல பிரதேசங்களில் இருந்து வரும் தகவல்கள் எமக்கு தெரிவிக்கின்றன.
ஊரடங்குச் சட்டத்தை உதாசீனம் செய்து அலட்சியப் போக்கோடு செயட்படுவது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் “பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடும் நோக்கிலேயே மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது அதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுத்து அனைத்து மக்களின் சுகாதாரத்தை காக்க முடியும்” எனக் கூறினார்.
இலங்கை போலீசாரின் அறிவித்தலின் படி கடந்த 4 நாட்களாக சுமார் 2036 பேர் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் சுமார் 500 கும் மேட்பட்ட வாகனங்களும் கைதாகியுள்ளது.
சட்டத்திட்கு கட்டுப்பட்டு சக மனித உயிரை மதித்து சற்று வீட்டிலேயே தங்கி இருக்க முயட்சி செய்யுங்கள், உங்களின் அலட்சியத்தால் அடுத்த உயிரை ஆப்பத்தில் வீழ்த்தும் இழி செயலுக்கு நீங்கள் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டி வரும். அண்மையில் இடம் பெரும் பல நிகழ்வுகள் நமது ஈமானிய சமூகத்திடம் கட்டுக்கோப்புடனும் ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ளும் இயல்பு இல்லாமல் போய் விட்டதோ என்ற அச்சத்தை ஏட்படுத்தி இருக்கிறது.
நாம் எல்லோரும் பொறுப்போடு நடந்துகொள்ள முயற்சி செய்வோம் – நன்றி