இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து பாகங்களிலும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவிக் கொண்டே இருக்கும் நிலையில் இலங்கை எல்லைக்குள் இந்த நேரத்தில் இந்தியாவில் இருந்து யாரும் உள்நுழையக்கூடாது என்பதற்காக இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் என்று கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பாதுகாப்புக்காக விமானப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.