கடற் பரப்பில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடல் நிலை: காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, காங்கேசன்துறை, மன்னார், புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய, ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடும் என்ற சாத்தியம் காணப்படுகிறது.

கடலில் பயணம் செய்வோர் மீனவ சமூகம் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

காற்றின் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மழை நிலை: கொழும்பு, காலி ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு, புத்தளம் வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Leave a Reply