வெள்ளம் வருவதற்கு முன் அணை கட்டுங்கள் என்ற வாசகத்திற்கு அமைவாக இலங்கையில் கடற் படையினர் சுத்தம் செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.
இலங்கையில் வானிலை அறிவிப்பின் படி காலி பிரதேசத்தில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.
இதற்கமைய காலி பகுதிகயில் உள்ள பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள், மரத்துண்டுகள் கடற்படையினரால் நேற்று அகற்றப்பட்டன.
மேலும் இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கின் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தெற்கு கடற்படை கட்டளை தளபதி றியர் அட்மிரல் கச்சப போலின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கின் ஆற்றின் குறுக்கே உள்ள வக்வெல்ல, தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த மூங்கில், மரங்களின் கிளைகள், கழிவுகள் அகற்றும் பணிகள் தென் கடற்படை சுழியோடி பிரிவின் வீரர்களினால் மேற்கொள்ளப்பட்டது.