வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கருத்துரைத்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு இந்த வருடம் 80 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிதி கடற்றொழில் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

You missed