அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிமிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஷோன் மார்ஷ் இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள், 73 ஒரு நாள் போட்டிகள், 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 2,073 ஓட்டங்கள், டெஸ்டில் 2,265 ஓட்டங்கள், இருபதுக்கு20 போட்டிகளில் 255 ஓட்டங்கள் என மொத்தம் சர்வதேச கிரிக்கெட்டில் 5,293 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.

ஷோன் மார்ஷ் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் மெல்போன் ரெனகேட்ஸ் அணிசார்பில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply