ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மூன்று நாட்கள் மருந்தகங்களை திறப்பதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய இன்றைய தினம், நாளைய தினம், நாளை மருதினம் ஆகிய நாட்களில் மருந்தகங்களை திறப்பதற்காக அரசாங்கத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும் இம்மூன்று நாட்களில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அதற்காக இராணுவத்தினால் போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய ஓய்வூதியம் பெறுபவர்கள் தமது ஓய்வூதிய அட்டையை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.