உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நிகழ்வுகள், போட்டிகள் நடைபெறாமல் இருக்கிறது.

அதேபோல தான் ஒலிம்பிக் போட்டியும் இந்த ஆண்டு நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முற்றுப் புள்ளியும் முன்னாள் நாம் கூறியிருந்தோம்.

இப்போட்டி நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாகும்.

இந்த வருடம் ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் ஜூலை மாதம் நடைபெற இருந்தது. ஆனாலும் கொரோனா வைரஸ் காரணமாக 2021/07/23ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிகளை பார்ப்பதற்காக டிக்கெட் எடுத்தவர்கள் விரும்பினால் அடுத்த ஆண்டு இந்த டிக்கெட் மூலம் பார்க்கலாம், விருப்பமில்லாதவர்கள் டிக்கெட் ஐ செலுத்தி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ஒலிம்பிக் (கமிட்டி) போட்டி அமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply