உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. இவை இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது. அவை என்னென்ன பார்க்கலாம்.
உடல் எடை குறையும் : எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடைக் குறையும் என்பது ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இதனால் உடலில் தனாக வளர்ச்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பதே இதற்குக் காரணம். உணவுக்கு முன்பும் ஒரு கிளாஸ் குடித்தால் அதிக உணவை உட்கொள்ள மாட்டீர்கள்.
செரிமானத்திற்கு உதவும் : வயிற்றுக் குடல்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து உணவு செரிமானத்தை தடையின்றி செயல்பட உதவுகிறது.
நீர்ச்சத்து : உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குடித்தால் உடலில் நீரேற்றம் அதிகரிக்கும்.
இது தவிர உடலின் நச்சுநீக்கியாகவும் செயல் படும். அதோடு தோல் , சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரல் ஆகியவற்றையும் சுத்தீகரிக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
அதேபோல் பருக்களை நீக்கும், கொழுப்பை கரைக்கும், மூளையின் இயக்கத்தை சுருசுருப்பாக்கும். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இவையும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.