சர்ச்சில் உள்ள குழந்தைகளைக் காப்பாற்ற மியான்மர் ராணுவத்திடம் கன்னியாஸ்திரி ஒருவர் கை கூப்பிக் கெஞ்சும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது

மியான்மர் நாட்டில் பிப்ரவரி முதல் வாரம் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அங்கு அமைந்திருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலிலும், கைதும் செய்யப்பட்டனர்.

மியான்மர் ராணுவத்தின் இந்தச் செயலைக் கண்டித்து அந்நாடு முழுவதும் கடும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அதை ஒடுக்க ராணுவம் தரப்பில் இணைய சேவையை முடக்குவது, துப்பாக்கிச் சூடு என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருந்தாலும், மக்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் செல்கிறது. இதுவரை போராட்டத்தில் பங்கேற்றவர்களில் குறைந்தபட்சம் 60 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது மியான்மர் ராணுவ வீரர்களிடம் மண்டியிட்டு கை கூப்பி கன்னியாஸ்திரி ஒருவர் கெஞ்சும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

கன்னியாஸ்திரியின் செயலை சற்று எதிர்பாராத இரண்டு ராணுவ வீரர்கள் அவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரினர். இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி கூறுகையில், “நான் அவர்களிடம் மண்டியிட்டுக் கெஞ்சினேன். குழந்தைகளைச் சுட்டு சித்திரவதை செய்ய வேண்டாம் என்று கெஞ்சினேன், அதற்குப் பதிலாக என்னைச் சுட்டுவிடுங்கள் என்றேன்” என்று அவர் தெரிவித்தார். இவரது இந்த புகைப்படம் காண்போரை கலங்கச் செய்கிறது.

குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க தன்னுயிரைப் பொருட்படுத்தாத கன்னியாஸ்திரியின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை மியான்மர் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல 1,600க்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Source : one India Tamil

By Admin

Leave a Reply

You missed

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து!!
———————————————
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும், புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“கட்டணங்கள் அதிகரிக்கும் போது, பொருட்களை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைகிறது. நாம் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இதைத் தடுக்க முடியாது, இது நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளில் ஒன்று வேலை இழப்பு.”

பலர் இது ஒரு மில்லியன் என்று கூறுகிறார்கள். அது ஒரு லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தாலும், அந்தத் தொகை பெரியதாக இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்… தங்கும் வசதிகளை வழங்குபவர்கள், கடைகள் நடத்துபவர்கள்… இது அனைவரின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நமது செலுத்தும் நிலுவைக்கு இன்னொரு சுமை வருகிறது.

நாம் பெறும் பணத்தின் அளவு குறைந்து வருகிறது. எனவே, நாம் கடன் வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கிறது. இந்த நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியும். பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையக்கூடும். எனவே, இலங்கைக்கு பல சிக்கல்கள் உள்ளன. எனவே அமெரிக்காவுடன் ஒன்றைப் பற்றி விவாதிக்கவும்.

உள்ளூர் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? எனவே, இதை ஒரு அவசரநிலையாகக் கருதி, அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பது குறித்து நாட்டிற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். “இல்லையெனில், இந்த நிலைமை குறித்து நாம் அறிக்கைகளை வெளியிடாவிட்டால், ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் எழும்.”