சிங்கள, தமிழ் புத்தாண்டை மக்கள் வீடுகளில் இருந்து கொண்டாடுமாறு மக்களுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்க உத்தரவிற்கு அமைய தனிமைப்படுத்தல், ஊரடங்கு சட்டத்திற்கு மதிப்பளிப்பது பொது மக்களின் பொறுப்பாகும்.

மேலும் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதும், அனர்த்த மிக்க பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும் அத்தியாவசிய தேவைக்காக அனுமதி பத்திரம் பெற்றவர்கள் அத்தியாவசியமில்லாத தேவைகளுக்காக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply