உலகளவில் பாதித்துள்ள கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் இலங்கையில் மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட நாளில் இருந்து இன்று வரை 66,835 பேர்கள் ஊரடங்கு சட்டத்தை மதிக்காத நிலையில் கைது செய்யப்பட்டார்கள்.
மேலும் 18,831 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.