ஊரடங்கு சட்டத்தில் இன்று (14) முதல் தளர்வுபடுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் தினமும் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

மறுஅறிவித்தல் வரை இந் நடைமுறை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச மற்றும் தனியார் துறையினர் தமது பணிகளை முன்னெடுக்கும் போதும் கொரோனா ஒழிப்பிற்கான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

By Admin

Leave a Reply