கொரோனா ஊரடங்கால் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையாளாம் என ஐக்ககிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக பெண்கள் கருத்தடை வசதிகளை இழந்துள்ளதால் இந்நிலை ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளவில் மக்கள்தொகை விவகாரங்களை கவனிக்கும் ஐ.நா மக்கள்தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரகாரம்
வருமானம் குறைந்த நாடுகளில், அதிகளவில் சுகாதார அமைப்புகள் மூடியிருப்பதாலும், மருந்து வினியோகம் பாதிக்கப்பட்டிருப்பதால் பெண்கள் மற்றும் சிறுமிகள் இனப்பெருக்க பராமரிப்பை குறைக்க கூடும்.

கொரோனா காரணமாக 6 மாதத்திற்கு ஊரடங்கு தொடரும் பட்சத்தில், 114 குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் வாழும் 4.7 கோடி பெண்கள், உரிய கருத்தடை வசதிகளை பயன்படுத்த முடியாததால், 70 லட்சம் திட்டமிடப்படாத கர்ப்பங்களுக்கு வழிவகுக்கும்.

ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு 3 மாதத்திலும், புதிதாக 1.5 கோடி பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியான வன்முறை நிகழ கூடுமெனவும் , அடுத்த பத்தாண்டுகளில் 20 லட்சம் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுகள் ஏற்படும். இதனை இடையிலேயே தடுத்து நிறுத்த ஐ.நா சிறப்பு திட்டங்களை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் 1.3 கோடி சிறுமிகள், சிறுவயதுத் திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படலாம். இது தொற்றுநோய்க்கு முன்னர் தடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.

Leave a Reply