2019 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டை இந்த மாதம் 31ம் திகதி உடன் காலாவதியாகும் என்ற நிலையில் உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாங்கம மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களின் ஆலோசனைக்கு அமைய மே மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டிற்கான ஊடகவியலாளர் அடையாள அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாவதர்கள் 2019ம் ஆண்டு அடையாள அட்டையை பயன்படுத்தி ஊடக பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான வர்த்தமானி அறிக்கையை வெளியிடுவதற்கு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாலக கலுவேவ
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்.