உலகளாவிய ரீதியில் அதிகமான இடங்களில் கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்த அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தொற்று நோயியல் நிபுணர் Maria van kerkhove தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பில் பணிபுரியும் 5 பேருக்கு சென்ற வாரம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
ஆனாலும் தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.
இதேவேளை, உலக சுகாதார அமைப்பை அண்மித்த பகுதியில் தற்போது அதிகளவானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதாக உலக சுகாதார அமைப்பின் அறுவை சிகிச்சை நிபுணர் Michael J. Ryan தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.