விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி பரீட்சையை மீள நடத்த திட்டம்

உயர் தர பரீட்சையில் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாள் மும்மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகியதாக தகவல்கள் கிடைத்துள்ளமையினால், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இரத்து செய்யப்பட்டுள்ள விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாளுக்கான, மீள் பரீட்சையை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மீள் பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply